
ஜொகூர் பாரு ஜூன் 9-
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இனி எந்த நேரத்திலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்.
இந்நிலையில் தேசிய முன்னணி – பக்காத்தான் ஹராப்பான், பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு மத்தியில் ரபிஸி ரம்லியின் பெர்சாமா கட்சி மற்றும் ஹம்ஸா ஜைனுடின் தலைமையிலான கூட்டணியும் களம் காணலாம்.
சில மாதங்களுக்கு முன்பு டத்தோ ஹம்சா ஜைனுடின் பெர்சத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஜொகூர் மாநில பெர்சத்து சயாப் எனப்படும் மலாய்காரர் அல்லாத பிறவு தலைவர் டத்தோ தன் லேக் காங் தலைமையில் செயல்பட்ட அந்த பிரிவு கலக்கபட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
ஒரு கால் ஹம்சா தலைமையிலான அணி உருவானால் அந்த கூட்டணியின் சார்பி்ல் இரண்டு இந்திய வேட்பாளர்களான திரு பூபாலன் பொன்னு சாமி , மற்றும் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் ஆகியோர் வேட்பாளராக களம் இறக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஜொகூரில் இருந்து தகவல் கசிகிறது.

