ஜாலான் பெசார் செமினி சந்தை
செமினி பஸ் நிலையம் அருகே
தற்காலிக இடமாற்றம்!

செமினி ஜாலான் பெசாரில் இயங்கி வந்த சந்தை சீரமைப்புப்  பணிகள் காரணமாக  செமினி பஸ் நிலையம் அருகே  தற்காலிக இடமாற்றம் கண்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு இந்தச் சந்தை செமினி சென்ட்ரல் பஸ் நிலைய பகுதியில் செயல்படும் என்று காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சந்திரன் ராமசாமி தெரிவித்தார்.

இந்தச் சந்தையின் இடமாற்றம் குறித்து வியாபாரிகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.

“பழைய சந்தையின் உள்ளே இருந்த சுமார் 15 கடைகளும்  வெளியே இருந்த சுமார் 20 கடைகளும் இடம் மாற்றம் கண்டுள்ளன” என்றார் அவர்.

இதனிடையே, தான் கடந்த 1982 ஆம் ஆண்டில்  ஜாலான் பெசார் சந்தையில் கோழி வியாபாரம் செய்யத் தொடங்கியதாக சாமி த/பெ ராமசாமி கூறினார்

தன்னோடு சேர்த்து நான்கு  இந்தியர்களின் கடை அங்கு செயல்பட்டதாகவும் இருவர் ஆட்டிறைச்சி   வியாபாரிகள் மற்றொருவர் மளிகைக் கடை வியாபாரி என்றும் அவர் சொன்னார்.

பழைய சந்தை புதிய இடத்தில் செயல்படுவதை பலர் இன்னும் அறிந்திருக்கவில்லை என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles