
வெளிநாட்டுத் தொழிலாளர் வேளை வாய்ப்பு தளர்வுத் திட்டத்தை மீற வேண்டாம் என்று மனித வள அமைச்சர் வ. சிவகுமார் இன்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டு தொழிலாளர் வேலை வாய்ப்பு தளர்வுத் திட்டத்தை மீறும் பொறுப்பற்ற நபர்களுக்கு எதிராக மனித வள அமைச்சு அமலாக்கத்தை அமல் படுத்தும் என்றார் அவர்.
அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உற்பத்தித் துறைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசாங்கம் இப்போது ஐந்து துறைகளில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு ஏதுவாக பல தளர்வுகளையும் அரசாங்கம் வழங்கி இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் பொறுப்பற்ற நபர்கள் இந்த வேலை வாய்ப்பு தளர்வுத் திட்டத்தை மீறிக் கொண்டிருப்பதை அவர் கண்டித்தார்

