
பேராக் மாநிலத்தில் தஞ்சோங் ரம்புத்தான் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சுரேஸ் குமார் ஆகியோர் இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து சிறப்பித்தனர்.
தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த ஆலய மகா கும்பாபிஷேகத்திற்கு 50,000 வெள்ளி நன்கொடை வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

