1எம்டிபி நிதி மோசடி சம்பந்தமான தேசிய தணிக்கையாளரின் அறிக்கையில் திருத்தம் செய்த வழக்கில் இருந்து முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கும் அவருக்குத் தூண்டுதலாக இருந்த அருள் கந்தா கந்தசாமியும் உயர்நிதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது குற்றம் சுமத்தப் போதுமான ஆதாரங்களைக் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறிதை அடுத்து, அவர்களிருவரையும் விடுவிப்பதாக நீதிபதி Zaini Mazlan (ஸைனி மஸ்லான்) தீர்ப்பளித்தார்.
தம்மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க நஜிப், அந்த அறிக்கையைப் பொது கணக்குக் குழுவிடம் தாக்கல் செய்வதற்கு முன்னர், அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து அதில் தமக்குச் சாதகமான திருத்தம் செய்ததாகவும் அவருக்குத் தூண்டுதலாக இருந்த 1எம்டிபி தலைமை செயல்முறை அதிகாரி அருள்கந்தா கந்தசாமி மீதும் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.