புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள்!அடிக்கல் நாட்டினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர், ஜூன் 15-
கடந்த 44 ஆண்டுகளாக புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் வாழ்ந்து வரும் தோட்டப் பாட்டாளி களுக்கு இரண்டு இலவச வீடுகள் வழங்கப்படுகிறது.

இரண்டு இலவச வீடுகள் கட்டும் அடிக்கல் நாட்டு விழா இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

வீடுகள் வழங்கக்கோரி 44 ஆண்டுகள் போராடி வந்த புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு இந்த இனிப்பான செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் பிரதிநிதி சிவகுமார் முனியாண்டி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles