
கோலாலம்பூர் ஜூன் 15-
நாட்டில் 98 ஆண்டுகள் வரலாறு கொண்ட கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக வி.கே.கே. இராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் இவருக்கு 155 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட பிரபாகரன் வைத்தியலிங்கத்திற்கு 148 வாக்குகள் கிடைத்தன.
இறுதியில் வாக்குகள்7 வித்தியாசத்தில் இராஜசேகரன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை தலைவர் பதவி தேர்தலில் மோகனா சின்னத்தம்பி 166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பன்னீருக்கு 137 வாக்குகள் கிடைத்தன.
உதவித் தலைவர் தேர்தலில் டாக்டர் சித்ரா தேவி வெற்றி பெற்றார். இவருக்கு 153 வாக்குகள் கிடைத்தன.
எதிர்த்து போட்டியிட்ட கவிமாறன் என்ற குமரன் முனியாண்டிக்கு 149 வாக்குகள் கிடைத்தன.
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ஐ.ஆர். பிரபாகரனுக்கு 158 வாக்குகள் கிடைத்தது.
எதிர்த்து போட்டியிட்ட சண்முக செல்விக்கு 144 வாக்குகள் கிடைத்தது.

மொத்தம் 14 பேர் கொண்ட கவுன்சிலர் தேர்தலில்
குமரகுரு 203 , பிரவின் டத்தோ தமிழ்ச்செல்வம் 172, டாக்டர் ராஜசேகரன் மோகன் 171, குளோரி 168, டத்தோ கணேஷ் 167, ஜெயா 166, , டாக்டர் புவனேஸ்வரி 164, ராம்குமார் 163, டத்தோ சந்திரசேகரன் 162, டாக்டர் நெடுஞ்செழியன் 161, டோனி கிளிபெர்ட் 161, டாக்டர் செல்வராஜூ 159, வர்மன் கந்தசாமி 157, குட்டி கிருஷ்ணன் மாதவன் 154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

