
கோலாலம்பூர் ஜூன் 15-
44 ஆண்டுகளாக புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங்கில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள் கிடைப்பது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் எதிர்நோக்கிய நீண்ட கால பிரச்சனைகளுக்கு இன்று நல்ல முறையில் தீர்வு பிறந்துள்ளது.

ஓவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு வீடுகள். இது இங்குள்ள மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வீடுகள் கட்டுமான திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதும் அந்த வீடுகளில் மக்கள் குடியேறுவார்கள்.

புக்கிட் கியாரா ரூமா பாஞ்சாங் மக்களுக்கு இரண்டு இலவச வீடுகள் கிடைக்க பெரும் பாடுபட்ட சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் விலாயா அமைச்சர் ஹன்னா இயோவை பெரிதும் பாராட்டுகிறேன் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

