
நாமக்கல்: ஜூலை 6-
கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மலேசியாவில் கவியரசு கண்ணதாசனுக்கு விழா எடுத்து சிறப்பிப்பதில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் .சரவணன் முதன்மை வகிக்கிறார்.
தமிழகத்தில் இருந்து பல அறிஞர்களைத்தருவித்து விழா எடுத்து வருகிறார்.
டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருதினைப் பெற்றுக்கொண்டு, சிறப்புரையோடு ஏற்புரையும் ஆற்றினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், திரு. பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, காந்தி கண்ணதாசன், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், வி.பி. குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

