ஜொகூரில் இலவச முதன்மை சுகாதார சிகிச்சை முறை அறிமுகம் செய்ய PH விருப்பம் – டாக்டர் சத்தியா

ஜொகூர் பாரு, ஜூலை 8-
ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு (PH) ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கினால், சிலாங்கூரில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள இலவச முதன்மை சுகாதார சேவை (Primary Healthcare) முறைமையை ஜோகூரிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக PH தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் PKR தேர்தல் இயக்குநரும், PKR துணைப் பொதுச் செயலாளருமான டாக்டர் என். சத்தியா பிரகாஷ் நடராஜன் கூறுகையில் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் வாய்ப்பை வழங்கவும், சிகிச்சைச் செலவின் சுமை மற்றும் அரசு மருத்துவமனைகளில் நீண்ட நேரக் காத்திருப்பை குறைக்கவும் இந்த முயற்சி உதவும் என்றார்.

“சுகாதாரம் என்பது PH-இன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம், பின்னர் ஏற்படக்கூடிய சிக்கல்களையும் அதிக மருத்துவச் செலவுகளையும் தவிர்க்க முடியும்.

நேற்று தெப்ராவ் பகுதியில் இலவச சுகாதார பரிசோதனை முகாமை நடத்துவதன் மூலம், மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும், சுகாதார சேவைக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறோம்.

இந்த நடவடிக்கை, சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் PH தேர்தல் அறிக்கையுடன் முழுமையாக ஒத்துப்போகிறது.

மலேசியாவில், அனைத்து மக்களும் எளிதாகவும் சமமாகவும் சுகாதார சேவைகளைப் பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தெப்ராவ் பகுதியில் நடைபெற்ற இலவச சுகாதார பரிசோதனை நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles