
ஜொகூர் பாரு ஜூலை 9-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு வரும் சனிக்கிழமை 11 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஜோகூர் மாநில மக்கள் நலத் திட்டங்கள் தொடர ஹரப்பானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கெஅடிலான்தேசிய மகளிர் பிரிவு செயலாளர் ஜெ. சங்கீதா கேட்டுக் கொண்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் மக்களின் நலன் கருதி பல திட்டங்களை வகுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜொகூர் மாநில மக்கள் கண்டிப்பாக ஹராப்பானுக்கு வாக்களிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

