
ஜொகூர் பாரு ஜூலை 9-
ஜொகூர் மாநிலம் முழுவதும் உள்ள பல சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்றேன்.
நான் கண்ட காட்சி மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்களின் பெரும் திரளான பங்கேற்பு, மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்கான வலுவான அறிகுறியாக உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இன்றைய இந்த எழுச்சியும் உற்சாகமும், ஜோகூர் மாநிலத்தை நாம் வெற்றிகரமாக கைப்பற்றும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாக எனக்கு உறுதியளிக்கிறது.

எனவே, ஜொகூர் மக்களிடம் நான் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அனைவரும் தவறாமல் வாக்களிக்கச் செல்லுங்கள்.
நம் அன்பான ஜொகூர் மாநிலத்தின் எதிர்காலத்திற்கும், நம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கும் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள்.
ஒவ்வொரு வாக்கும் மிகவும் மதிப்புமிக்கது. வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து புதிய வரலாற்றைப் படைப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

