
ஜொகூர் பாரு ஜூலை 9-
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த மாநிலத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் ஜொகூர் மக்களுக்கு வந்துள்ளது என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் என்பது வெறும் மாநில அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல; ஜொகூரின் எதிர்காலத்தையும் வருங்கால தலைமுறையினரின் வாழ்வையும் நிர்ணயிக்கும் முக்கியமான தருணமாகும்.
ஜொகூரைச் சேர்ந்த அனைத்து மக்களையும், குறிப்பாக வேலை அல்லது கல்வி காரணமாக மாநிலத்திற்கு வெளியே இருக்கும் இளைஞர்களையும், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிக்கும் ஜனநாயகப் பொறுப்பை நிறைவேற்றுமாறு நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் பாலோ சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் ரூபன் ஆறுமுகத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

