
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், ஜூலை 9-
வரும் ஜூலை 19 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் புரட்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று புரட்சி இயக்கத்தின் தலைவர் உமாகாந்தன் தெரிவித்தார்.
இந்த அரசியல் மாநாட்டில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.
குறிப்பாக யாரையும் ஒதுக்காமல் நாங்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
இந்திய சமுதாயத்தின் மத்தியில் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மற்ற இனத்தவர்கள் மத்தியில் அரசியல் ஒற்றுமையை காண முடிகிறது.
அவர்கள் வேவ்வொரு கட்சியில் இருந்தாலும் இனம் என்ற போது ஒன்றாக இணைகிறார்கள்.
அதே ஒற்றுமை இந்தியர்கள் மத்தியில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த அரசியல் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடுகளை களைந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இனம் மதம் சமயம், மொழி, கல்வி உட்பட பல விவகாரங்கள் தலை தூக்கும் போது அந்தெந்த அரசியல் அமைப்புக்கள் குரல் கொடுக்கிறது.
இந்த குரல் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் குரலாக இருக்க வேண்டும் என்பதே புரட்சி இயக்கத்தின் இலக்கு என்று அவர் சொன்னார்.
புரட்சி இயக்கத்தின் ஏழாம் ஆண்டை முன்னிட்டு இந்த அரசியல் மாநாடு ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த மாநாட்டில் பத்து பேருக்கு குறிப்பாக கபடி, சிலம்பம், கல்வி உட்பட பல துறைகளில் பாதித்தவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உமா கந்தன்
கு.சித்தார்த்தன்,
சுகந்தி மோகன்,
ஜீவா சுப்பிரமணியம்,
கிஷோர் சுரேஷ் ,
சேரிஷ் கணேசன்
ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

