மலேசிய இந்து சங்தத் தேர்தலில்டாக்டர் முரளி தலைமையில் மறுமலர்ச்சி அணி போட்டி

கோலாலம்பூர், ஜூலை 11-
மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டு பேராளர் மாநாடு வரும் 19 ஆம் தேதி பண்டார் சன்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இம்முறை 9 பதவிகளுக்குச தேர்தல் நடைபெறுகிறது.

அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் டாக்டர் முரளி தலைமையில் மறுமலர்ச்சி அணி சார்பில் ஜெகசீலன் குஞ்சம்பு, மா.முனியாண்டி, க. மாணிக்கவாசகம், எஸ் பாலாமணி, பால கிருஷ்ணன், ஜி சந்துரு, தினேஷ், பிரேமலா, ப.சிவம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நாடு தழுவிய அளவில் மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வாக்களிப்பார்கள்.

பதவி மோகத்திற்காக மறுமலர்ச்சி அணி போட்டியிடவில்லை.

மலேசிய இந்து சங்கத்தில் மாற்றங்கள் மற்றும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கில் மறுமலர்ச்சி அணி போட்டியிடுகிறது என்று பினாங்கு மாநிலத்தை சேர்ந்த முனியாண்டி இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles