நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஐந்து இந்தியர்கள் போட்டி

கோலபிலா, ஜூலை 14-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.

கோலப்பிலா மேடான் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்தார்.

நீலாய் சட்டமன்ற தொகுதியில் அருள் குமார், ரெப்பா சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் மற்றும் சிரம்பான் ஜெயா தொலைக்காட்சியில் இளம் வேட்பாளர் முகுந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் கெஅடிலான் உச்ச மற்ற உறுப்பினர் மணிவண்ணன் ஜெராம் பாடாங் தொகுதியில் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles