வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது தோல்விக்கு முக்கிய காரணம்! சார்லஸ் சந்தியாகோ கூறுகிறார்

கோலாலம்பூர் ஜூலை 14-
வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதே ஜொகூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் மோசமான தோல்விக்கு காரணம்; என்று
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ கூறினார்.

சமீபத்தில் நடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் ஏமாற்றமளிக்கும் தோல்விக்கு காரணம் மக்களுக்கு அது அளித்திருந்த சீர்திருத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதே.

மாறாக வாக்குகளைப் பிரிப்பதாகக் கூறப்படும் பெர்சாமா கட்சியின் எழுச்சி அல்ல.

தேர்தலுக்கு சுமார் 53 நாட்களுக்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட பெர்சாமா கட்சியை, நம்பிக்கை கூட்டணியின் மோசமான செயல்பாட்டிற்கான முக்கிய காரணமாகக் குற்றம் சாட்டுவது சரியல்ல.

மேலும் நிறைவேற்றப்படாத சீர்திருத்த வாக்குறுதிகள் மீதான வாக்காளர்களின் ஏமாற்றத்தையே ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன.

வாக்காளர்கள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.

வெறுமனே மற்றொரு அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு எதிர்வினையாற்றவில்லை என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles