
நீலாய், ஜூலை 16-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள வேளையில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஐந்து இந்தியர்கள் போட்டியிடுகிறார்கள்.
நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ.அருள்குமார் மீண்டும் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
ரெப்பா சட்டமன்ற தொகுதியில் நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீரப்பன் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் முகுந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அதேசமயம் ஜெராம் பாடாங் தொகுதியில் வழக்கறிஞர் மணிவண்ணன் மற்றும் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற தொகுதியில் ராஜசேகரன் போட்டியிடுகிறார்கள்.
இதில் அனைவரின் பார்வையும் நீலாய் சட்டமன்ற தொகுதி மீது திரும்பி உள்ளது.
கடந்த 2007 இல் நடைபெற்ற தேர்தலில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் இளம் இறங்கிய இளம் வேட்பாளரான அருள் குமார் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பின்னர் 2013, 2018 , 2022 இல் நடைபெற்ற தேர்தலில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் இவர் அமோக வெற்றி பெற்றார்.
இந்த முறை பலர் போட்டியிட்டாலும் இவரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது எனலாம்.
நீலாய் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியது.
நீலாய் மக்களுக்கு எதாவது பிரச்சனைகள் என்றால் அங்கு ஓடோடி வந்து அந்த பிரச்சினையை நல்ல முறையில் தீர்வு காண்பவர் அருள் குமார் ஆவார்.
அந்த வகையில் நீலாய் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கும் அருள் குமார் வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைப்பார் என்பதில் ஐயமில்லை

