

சொக்சோ மற்றும் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி MYFutureJobs பிப்ரவரி 11,12 ஆம் தேதிகளில் மிகப்பெரிய அளவில் Ayer Keroh Pusat Dagangan Antara Bangsa (Mitc) lMelaka மண்டபத்தில் நடைபெறுகிறது.
காலை 9.00- மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறும்.
6,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் பல நிறுவனங்கள் உங்களின் வேலை வாய்ப்புகளுக்காக MYFutureJobs 2023 இல் காத்திருக்கின்றன!
கால தாமதமின்றி உடனே நாடுங்கள்.
www.myfuturejobs.gov.my/careerfair அகப் பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மனித வள அமைச்சர் வ.சிவகுமார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

