அழுக்கு படிந்த இடத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்க வைப்பு!
பெர்லிஸ் தொழிலாளர் துறை அதிரடி நடவடிக்கையில் அம்பலமானது

மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்லிஸ் மாநிலத் தொழிலாளர் துறை, கங்கார் வட்டாரத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அழுக்கு படிந்த இடத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

446 சட்டத்தின் கீழ் தங்குமிடத்திற்கான சான்றிதழ் இல்லாமல் சம்பந்தப்பட்ட முதலாளி அந்நிய தொழிலாளர்களை அழுக்கு படிந்த இடத்தில் தங்க வைத்துள்ளார்.

தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகள் தரநிலைச் சட்டம் 1990 (சட்டம் 446) இன் கீழ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இது தெரிய வந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 8 அதிகாரிகள் இடம் பெற்றனர்.
.
ரத்து செய்யப்பட்ட அல்லது இதற்கு முன் அங்கீகரிக்கப்படாத தங்குமிடச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைக் கண்காணிக்கும் வகையில் பெர்லிஸ் மாநில தொழிலாளர் துறை நடவடிக்கையை மேற்கொண்டது.

சோதனையின் அடிப்படையில், முதலாளிகள் இன்னும் தங்களுடைய ஊழியர்களுக்கு, குறிப்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தரமான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்பது கண்டறியப்பட்டது

அந்நிய தொழிலாளர்கள் தங்குமிடம் உகந்ததாக இல்லை.

எனவே, பெர்லிஸ் மாநில ல் தொழிலாளர் துறை பிரிவுகள் 24D மற்றும் 24I, சட்டம் 446 இன் கீழ் விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தானே நேரில் கண்டறிய Indra Kayangan மாநில சட்டமன்ற உறுப்பினர் YB Puan Gan Ay Ling நேரில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles