
கோலாலம்பூர் ஜூலை 25-
மலேசியாவில் உள்ள பல்வேறு இன மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்கள் மூதாதையர் தாயகங்களைச் சார்ந்திருக்கலாம் என்று கூறியதன் மூலம் இன உணர்வுகளை அப்பட்டமாகப் புறக்கணித்த கெடா மந்திரி புசார் சனுசி நோரின் செயல்களை புக்கிட் குளுக்கோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் கடுமையாகச் சாடினார்.
இது நெகிரி செம்பிலானில் தொடங்கியுள்ள புதிய கூட்டணியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்பது குறித்து ஆழ்ந்த கவலை நிலவுவதாகவும் அவர் கூறினார்.
சனுசி கூறியதை தொடர்ந்து தேசிய முன்னணி தனித்துச் செயல்பட வேண்டும் என்ற மஇகச் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் அழைப்பு, பாஸ் கட்சியால் தூண்டப்பட்ட சூழ்நிலையைச் சற்றும் தணிக்கவில்லை என்று அவர் சொன்னார்

