

தம்பின் ஜூலை 25-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ரெப்பா தொகுதியில் வழக்கறிஞர் வீரப்பன் போட்டியிடுகிறார்.
நேற்று இரவு நடைபெற்ற மாபெரும் பிரச்சார கூட்டத்தில் வீரப்பனுக்கு ஆதரவு தெரிவிக்க மக்கள் அலையென திரண்டனர்.
ஜசெக துணை தலைவர் மற்றும் அமைச்சர் ஙா கோர் மிங், ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக், கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் குணா ஆகியோர் வீரப்பனுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

