
கோலாலம்பூர், ஆக.
மலேசியத் திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று மிகவும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிள்ளையாரை வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் எண்ணெய் சாத்தும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

மலேசியாவில் பிரசித்திப் பெற்ற கோர்ட்டுமலை பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்..
தமிழ் நாடு பிள்ளையார் பட்டி தலைமை குருக்கள் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் மற்றும் கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் தலைமை குருக்கள் சிவஸ்ரீ சிவகுமார் தலைமையிலான குருக்கள் ஆகம முறைப்படி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.
பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து பக்தர்களுக்கும் நன்கொடை வழங்கிய அனைவருக்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
கணேச பெருமானின் அருளைப் பெறும் வகையில் நடைபெற்ற இம்மகா கும்பாபிஷேகம் பக்தி பரவசத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.
மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவகுமார் உட்பட இதர முக்கிய பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

