
கோலாலம்பூர் ஆக 23-
மலேசியத் திருநாட்டில் மிகவும் புகழ்பெற்ற கோர்ட்டு மலை பிள்ளையார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகத்தை காண வந்து சுமார் 15,000 பக்தர்களுக்கு
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (Iskcon)
Johor Senai சுவையான அன்னதானம் வழங்கியது.

Iskcon Senai
கிளைத் தலைவர்
நாகராஜூ , இளம் தொழில் முனைவர்
டத்தோ ஜீவா, பிரிக்பீல்ட்ஸ்
சீத்தாராம் குமார் மற்றும் பெரியசாமி ஆகியோர் கூட்டு முயற்சியில் இந்த அன்னதானம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
15,000 பக்தர்களுக்கு 9 வகையான உணவு மற்றும் காய்கறிகளை பறிமாற 300 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
கூடாரம் அமைத்து பக்தர்களுக்கு வாழை இலையிலும் உணவு பரிமாறப்பட்டது.

நேற்று இரவு முதல் காய்கறிகள் வெட்டி இன்று காலையில் அமைத்து பக்தர்களுக்கு சுடசுட அன்னதானம் வழங்கப்பட்டது என்று
Iskcon Senai
கிளைத் தலைவர் நாகராஜூ கூறினார் .
நேற்று சனிக்கிழமை காலையில் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இதனிடையே மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு
Iskcon Senai ஏற்பாட்டில் புத்தக முகாம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மகாபாரதத்தின் பகவத்கீதை இருக்க வேண்டும் என்று நோக்கில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது என்றார்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் பகவத்கீதை புத்தகங்களை வாங்கி ஆதரவு கொடுத்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கூறுகையில் 15,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கிய Iskcon Senai இயக்கத்தை வெகுவாக பாராட்டினர்.

