
சுபாங் ஜெயா, செப் 4-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 5 ஆம் தேதி பினாங்கு பாடாங் போலா அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ம இகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மாலையில் சிறப்பு வருகை தரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்குவார்.
இந்த போட்டியில் சிலாங்கூர் மாநிலம் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கிறது.

பெட்டாலிங் ஜெயா கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை, துணை தலைவர் கள் கென்னத் கண்ணா, குணா ஆகியோர் தலைமையில் இன்று சிலாங்கூர் குழுவுக்கு கொடி வழங்கும் வைபவம் நடைபெற்றது.
சிலாங்கூர் காற்பந்து சங்கத்தின் செயலாளர் ஈஸ்ரின் நபில் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர் சேகர் சந்திரன் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பினாங்கில் நடைபெறும் மீபா பியோண்ட் கால்பந்து போட்டியில் சிலாங்கூர் குழு சாம்பியன் பட்டத்தை வெல்ல போராடும் என்று பத்துமலை கேட்டுக் கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிலாங்கூர் குழு சாம்பியன்.
ஆகவே சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றியோடு திருப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்

