
கோலாலம்பூர் செப் 2-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி பினாங்கில் 12 வயதுக்கு உட்பட்ட இளையோர் கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஆண்கள் பிரிவில் 20 குழுக்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 குழுக்கள் கலந்து கொள்கிறது.
கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் ஃமீஃபா பியோண்ட் கால்பந்து போட்டிக்கு ம இகா மற்றும் AIMST University வழங்கி வரும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.
மேலும் தேசிய விளையாட்டு மற்றம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு 30,000 வெள்ளி மானியம் வழங்கி உள்ளது.
இது தவிர நல்லுள்ளம் கொண்டவர்கள் ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
வரும் செப்டம்பர் 5 இல் நடைபெறும் மீபா பியோண்ட் கால்பந்து போட்டியை காண சிறப்பு வருகை தரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ வெற்றி பெறும் குழுக்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பிப்பார் என்று அவர் சொன்னார்.

