கோவிட் பெருந்தொற்றை விட எரிபொருள் சவால் கடுமையாக இல்லை : டோனி பெர்னாண்டஸ்

ஹங் காங், செப் 18 – கோவிட்- 19 பெருந்தொற்று காலத்தில் சந்தித்த சவால்களை விட, தற்போது விமான எரிபொருள் உயர்வால் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் ஒன்றும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கவில்லை என ஏர் ஆசியாவின் இணை தோற்றுநர் டோனி ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

ஏர் ஆசியா நிறுவனத்தின் நிதி நிலை குறித்த முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாக அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

“ஏர் ஆசியா வலுவான பணப் புழக்கத்தைக் கொண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, உலக அரசியல் பதற்ற நிலையும், உயர்ந்திருக்கும் எரிபொருள் விலையும் காரணமாக உள்ளது. அதே வேளை, விமான பயணத்துக்கான தேவை வலுவாகவே இருக்கிறது ” என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நம்பத்தகுந்த வட்டாரத்தைச் சுட்டிக் காட்டி, மலேசிய ஏர்லைன்சும் பாத்திக் ஏர் நிறுவனத்தையும் , ஏர் ஆசியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து தேவையைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா என மலேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இரு நாட்கள் கழித்து ஏர் ஆசியாவின் உண்மை நிதி நிலை குறித்து விளக்கமளிக்க டோனி பெர்னாண்டஸ் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles