

கோலாலம்பூர் ஆக 6-
ஹாங் துவா பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் பல தசாப்தங்களாக அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் கோயில் வருடாந்திர திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் எடுத்து காணிக்கை செலுத்தினர்.
பிற்பகலில் மகேஸ்வர பூசைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்பட்டது.
இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் மற்றும் விலாயா மாநில தலைவர் சத்யா சுதாகரனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விலாயா மாநில பிபிபி கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ் குமார், மகளிர் அணி தலைவி நந்தினி, ஹாங் துவா பிபிபி கிளைத் தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதனிடையே பிபிபி கட்சியின் விலாயா மாநில இளைஞர் மற்றும் மகளிர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான பானங்கள் வழங்கப்பட்டது

