2027 பட்ஜெட்டில் இந்திய வர்த்தகர்களுக்கு உதவ 100 கோடியை ஒதுக்க வேண்டும்! மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள்

கோலாலம்பூர் ஆக 8-
வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

அண்மையில் பிரதமரை நேரில் சந்தித்து இந்திய வர்த்தகர்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாங்கள் முன் வைத்த கோரிக்கையை செவிமெடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவுவதாக கூறினார்.

அந்த வகையில் நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு உதவ 2027 பட்ஜெட்டில் 100 கோடி வெள்ளியை ஒதுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மேலும் மடானி அரசாங்கம் பல வகைகளில் இந்திய சமுதாயத்திற்கு உதவி வருகிறது.

அரசாங்கம் ஒரு செயலக தளத்தை அமைத்து அதன் மூலம் உதவிட முன் வர வேண்டும்.

இப்போது கடனுதவி அல்லது உதவிகளை பெற வர்த்தகர்கள் பல அரசு ஏஜன்சிகளை நாட வேண்டியுள்ளது.

இவை அனைத்தும் ஒரே செயலக தளத்தில் அமைத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

இன்று மைக்கி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles