
கோலாலம்பூர் ஆக 9-
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (MAICCI), மைக்கி தொழில் முனைவோர் உச்சிநிலை மாநாடு 2026 மற்றும் MAICCI MUDRA சாலைப் பயணம் 2026 ஆகிய நிகழ்ச்சிகளை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற MAICCI தலைமையக ஊடகவியலாளர் சந்திப்பின் போது மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி 2026
காலை 9.00 மணிக்கு மேல் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் (KUSKOP) மாண்புமிகு ஸ்டீபன் சிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
MAICCI தொழில்முனைவோர் உச்சிநிலை மாநாடு 2026 என்பது தொழில் முனைவோர், வர்த்தகச் சமூகத்தினர், முகமைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தொழில்முனைவோர் சூழலமைப்பை வலுப்படுத்தவும், தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளைத் திறந்து விடவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சி, மலேசியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் MAICCI MUDRA சாலைப் பயணம் 2026 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும.
இதன் மூலம் தொழில் முனைவோரை நேரடியாக அணுகி, தகவல், நிதியுதவி, வர்த்தக ஆதரவு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான அணுகலை அதிகரிப்பதே நோக்கமாகும்.
இந்த உச்சிநிலை மாநாட்டின் மூலம், பங்கேற்பாளர்கள் தொடர்புடைய முகமைகள் வழங்கும் பல்வேறு முயற்சிகள் மற்றும் வசதிகள் குறித்து அறிந்து கொள்வதுடன், வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கி புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் முடியும்.
அரசாங்கம்,, நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தினருக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு, அதிகமான திறன்மிக்க தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும், போட்டித்தன்மை மிக்கவர்களாகவும், சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்து உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும் முக்கியமானது என MAICCI நம்புகிறது என்று அவர் சொன்னார்.
MAICCI தொழில் முனைவோர் உச்சி மாநாடு 2026-ஐ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க முன்வந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவன் சிம் சீ கியோங் அவர்களுக்கு MAICCI தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், 20 செப்டம்பர் 2026 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தொழில்முனைவோர்களும் வர்த்தகச் சமூகத்தினரும் கலந்து கொள்ளுமாறு MAICCI அன்புடன் அழைப்பு விடுக்கிறது என்றார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைக்கி துணை தலைவர் டத்தோ ஏ.டி.குமரராஜா, ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா, திருநாவுக்கரசு, டத்தோ இராஜசேகரன், கானா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

