

பத்துகாஜா,செப்15: மெங்கலம்பூ பகுதியில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் தன்னார்வத் தீயணைப்பு குழுவிற்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் வெ.10 ஆயிரம் மானியமாக வழங்கினார்.
இவ்வட்டாரத்தின் சிறந்த சேவையையும் செயல்பாட்டையும் கொண்டிருக்கும் இந்த தன்னார்வக்குழு தொடர்ந்து மேலும் ஆக்கப்பூர்வமாக இயங்க சொந்த நிலம் வாங்கி அதில் கட்டடம் எழுப்பு முயற்சியில் களமிறங்கியுள்ள நிலையில் அவர்களின் முயற்சிக்கு தனது பங்களிப்பாக மாண்புமிகு சிவகுமார் இந்த மானியத்தை வழங்கினார்.
இந்த தன்னார்வக்குழு சிறப்பாக இயங்குவதாகவும் இங்குள்ள மக்களுக்கு அவர்களின் சேவையும் செயல்பாடும் பெரும் உதவியாக இருப்பதாகவும் கூறும் சிவகுமார் பொது மக்களும் இக்குழுவின் மீது நன்மதிப்பையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, இம்மாதிரியான தன்னர்வ அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடு இத்தொகுதியில் நிறைவாக இருப்பதாகவும் இளையோர் மக்கள் சேவையில் ஈடுபட இது பெரும் பங்காற்றுவதாகவும் கூறினார்.
அதே வேளையில்,இக்குழு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது பங்களிப்பு இருக்கும் என்று இம்மாதிரியான திட்டங்களை பத்துகாஜா நாடாளுமன்றத்தில் மேலும் விரிவுப்படுத்த ஆவணம் செய்யப்படும் என்றும் தன்னார்வத் தீயணைப்பு குழு நிலம் வாங்குவதற்காக மேற்கொண்ட நிதிதிரட்டும் விருந்து நிகழ்ச்சியில் மாண்புமிகு சிவகுமார் இதனை குறிப்பிட்டார்.

