

(கு.அன்பரசன்)
பாலிங் செப்16-பாலிங் மாட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான 2026 உத்வேக தடகள விளையாட்டுப் போட்டி – {“Sukan Inspirasi Murid (SIM) 2026”,)கடந்த அண்மையில் மிகச் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடைபெற்றது. மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணரவும், அவர்களிடையே விளையாட்டு ஆர்வம், ஒற்றுமை, தன்னம்பிக்கை மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் இப்போட்டி சிறந்த தளமாக அமைந்தது.
பாலிங் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் இப்போட்டியின் ஆலோசகருமான திரு. கார்த்திக் சோமுநாயுடு அவரின் வழிகாட்டுதலிலும் , பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியின் புறப்பாடத் துணைத்தலைமையாசிரியர் திருமதி. லோகேஸ்வரி கிருஷ்ணன் அவர்களின் திறம்பட தலைமையிலும் நிருவாகத்திலும், அப்பள்ளியின் ஆசிரியரும் இப்போட்டியின் செயலாளருமான திரு. தமிழ்குமரன் கனிசன் அவர்களின் களப்பணியிலும் பாலீ ங் மாவட்ட ரீதியிலான இப்போட்டி இனிதே நடைபெற்றது.
மேலும், தடகளப் போட்டிகளின் விளையாட்டு முதன்மை அதிகாரியும் பெலாம் தோட்ட தமிழ்ப்பள்ளியின் ஆசிரியருமான திரு. பிரகலநாதன் பாலகிருஷ்ணன் அவர்கள், இப்போட்டி அனைத்துத் தடகள நிகழ்வுகளும் நெறிமுறைகளின்படி தங்குதடையின்றி நடைபெற பெரும் பங்காற்றினார்.
.
பாலீங் மாவட்டதில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்டுள்ள 8 தமிழ்ப்பள்ளிகள் உற்சாகத்துடனும் முழுமையான விளையாட்டு உணர்வுடனும் இப்போட்டியில் பங்கேற்றனர். மாணவர்கள் பல்வேறு தடகளப் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் போட்டியிட்டனர். இதன் மூலம், மாணவர்களின் விளையாட்டுத் திறமை மட்டுமன்றி, அவர்களிடையே ஒற்றுமை, நட்பு, ஒழுக்கம் மற்றும் சகிப்புத்தன்மையும் வளர்க்கப்பட்டது.
இப்போட்டியின் சிறப்பம்சமாக, கெடா மாநில பாலர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளுக்கான கல்வி துணை இயக்குனர் ஐயா திரு. நாகேந்திரன் சுப்ரமணியம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, போட்டியை அதிகாரபூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.
தமது நிறைவுரையில், இவ்விளையாட்டுப் போட்டியை மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் ஏற்பாடு செய்த பாலிங் மாவட்ட தலைமையாசிரியர்கள், துணைத்தலைமையாசிரியர்கள் ,ஆசிரியர்கள், ஏற்பாட்டுக் குழுவினர், நடுவர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் அவர் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்தகைய விளையாட்டு நிகழ்வுகள் மாணவர்களுக்கிடையே மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு , அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவதாகவும் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான ஒற்றுமையை எடுத்துக்காட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இப்போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியை பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி தனதாக்கிக் கொண்டது. மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், கிம்சேங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் வாகை சூடின. பெலாம் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சர்வேஷ்வரன் மகேந்திரன் மற்றும் சுவேதா சுரேஷ் சிறந்த வீரராகவும் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பாலிங் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான உத்வேக தடகள விளையாட்டுப் போட்டி என்பது வெறும் விளையாட்டுப் போட்டியாக மட்டுமன்றி, பாலிங் மாவட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஒன்றிணைக்கும் ஓர் அருமையான தளமாகவும், அவர்களின் விளையாட்டு மற்றும் ஆளுமைத் திறன்களை வளர்க்கும் ஒரு முக்கியமான முயற்சியாகவும் அமைந்தது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைந்து இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியிருப்பது, தமிழ்ப்பள்ளிகளின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
“ஒற்றுமையில் வலிமை; விளையாட்டில் வளர்ச்சி; முயற்சியில் வெற்றி!” என்ற உணர்வுடன் நிறைவடைந்த இந்நிகழ்வு, மாணவர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் ஓர் இனிய அனுபவமாக அமைந்தது.
2026-ஆம் ஆண்டுக்கான உத்வேக தடகள விளையாட்டுப் போட்டி (SIM) மிகச் சிறப்பான முறையில் நடைபெற உறுதுணையாக இருந்த கெடா மாநிலக் கல்வி இலாக்கா, பாலிங் மாவட்டக் கல்வி அலுவலகம், பாலிங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகத்தின் தலைவி பத்து பெகாக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி புவனேஸ்வரி பெரியகருப்பன் மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்கள் மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி உதயமலர் முனியாண்டி, புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாரியை திருமதி ஈஸ்வரி சங்கரலிங்கம், கிம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி இராதாமணி சுப்பிரமணியம், கோலக் கெட்டில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு சங்கரன் கணேசன் ,பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. இந்திரன் ஆனந்தன், கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சாரதாமணி சுப்பிரமணியம், குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.சரவணக்குமார் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் ஆகியோருக்கு இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினர் தங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மேலும், இப்போட்டியில் சிறப்பு அழைப்புப் பள்ளிகளாகக் கலந்துகொண்ட பிஞ்ஜோல் தேசியப் பள்ளி, பத்து பெக்காகா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியோருக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.. பரிசுகளுக்கான முதன்மை ஆதரவாளர் ‘Lime & Lime Product Sdn Bhd’ நிறுவனத்திற்கும், உணவு மற்றும் பானங்களை வழங்கிய ‘Mutaiyas Cash and Carry”நிறுவனத்தின் உரிமையாளர் திரு.வாசுதேவன் முத்தையா அவர்களுக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர்..
தொடர்ந்து, செல்வி ஷாலினி சுப்பிரமணியம்,திருமதி தேவமேரி, யுனிடார் (UNITAR) பல்கலைக்கழகத்தின் மாணவிகள், அனைத்துப் பள்ளிகளின் புறப்பாடத் துணைத்தலைமையாசிரியர்கள், பாலிங் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்கள், விளையாட்டுப் போட்டி அதிகாரிகள் மற்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்போட்டி வெற்றிகரமாக நடைபெற நிதியுதவியும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் ஏற்ப்பாட்டு குழுவினர் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொண்டனர்.
படம் விளக்கம்
1)மாணவர்களின் போட்டி விளையாட்டுகள்

