

பி.மலையாண்டி
கோலாலம்பூர் ஆக 14-
நாட்டில் புகழ்பெற்ற கோலாலம்பூர் பிள்ளையார் கோயிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
நேற்று இரவு கோர்ட்டு மலை பிள்ளையார் பிள்ளையார் கோயிலில் இருந்து தங்க ரதம் ஊர்வலம் நடைபெற்றது.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கலந்து சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல இயக்கங்கள் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கியது.
குமார் தலையிலான அன்பர்கள் 2,500 பேருக்கு மதிய உணவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

