
ஷா ஆலாம், செப்.18: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு மன்னிப்பு வழங்கும் வாரியத்தின் முடிவின்படி, அவரது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய நிபந்தனையுடனான மன்னிப்பின் கீழ், நஜிப் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
எனினும், இந்த நிபந்தனையுடனான மன்னிப்புக்கு 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு BHEUU தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவுக்கான 64ஆவது மன்னிப்பு வாரியக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் நஜிப் தொடர்பான இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

