பண்டான் தாமான் மேகா அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா! முதல் முறையாக இரத ஊர்வலம்

பண்டான், செப் 18-
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பண்டான் தாமான் மேகாவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இம்முறை விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

ஆலயத் தலைவர் பாலகுமரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

Blues Brother Welfare Association Malaysia இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் எம் சங்கர் அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற முழு ஆதரவு வழங்கினார்.

மேலும் இந்த ஆலயத்தின் அறங்காவலராக டத்தோ டாக்டர் எம் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆலய நிர்வாகம் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தது.

தெரத்தாய் சட்டமன்ற உறுப்பினர் இயூ ஜியா ஹாவ், அம்பாங் காவல் துறையைச் சேர்ந்த துவான் விஸ்னு, துவான் சிவா , அம்பாங் இந்து சங்கத்தின் வட்டார பேரவைத் தலைவர் ரவின் ஆகியோர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற சகோதரர் கிரி தலைமையிலான இளைஞர்கள் முக்கிய பங்காற்றினார்.

மேலும் முதல் முறையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த ஆலயத்தில் இரத ஊர்வலம் நடைபெற்றது ஒரு புதிய வரலாறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles