கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் 7 ஆம் நாள் நவசக்தி விழாவில் சித்தார் மாஸ்தர் சமுவேல் தாஸ் – சிலம்பம் மாணவர்களின் படைப்பு பரவசத்தில் ஆழ்த்தியது!

கோலாலம்பூர் அக் 17-
நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா செந்தூல் தண்டாயுதபாணி திருக்கோவில் மண்டபத்தில் தொடர்ந்து மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு 53 ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா 10-10-2026 ஆம் தேதி முதல் 21-10-2026 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.

நேற்று 7ஆம் நாள் நவசக்தி நவவிழா உபயத்தை டத்தோ இராமநாதன் மெய்யப்பன் குடும்பத்தினர் மற்றும் கூட்டரசு பிரதேச சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர் டி. உதயகுமார் ர ஏற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் உபயக்காரர்களுக்கு
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் பரிவட்டம் கட்டி கெளரவித்தார்.

நாட்டில் புகழ்பெற்ற சித்தார் மாஸ்தர் சமுவேல் தாஸ் மாணவர்களின் சித்தர் படைப்பு பரவசத்தில் ஆழ்த்தியது.

மேலும் கூட்டரசு பிரதேச சிலம்ப கழகத்தின் மாணவர்களின் சிலம்ப கண்காட்சியும் பெரிதும் கவர்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வரும் கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் சமய பணி மிகவும் பாராட்டுக்குரியது என்று டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.

இதனிடையே வரும் 19 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 20 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் மற்றும் அக்டோபர் 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.

கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் தேவிகா, துணை தலைவர் ரமணி, செயலாளர் அமரேசன், துணை செயலாளர் முருகராஜ், பொருளாளர் கருணாகரன், செயலவை உறுப்பினர்கள் மீனா, ஹேமாலதா, கண்ணன், ராமு, துளசி குணசேகரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles