
கோலாலம்பூர் அக் 17-
கோத்தா கெமுனிங் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் இன்று வெளியிட்ட அறிக்கையில் அம்னோ இளைஞர் அணித் தலைவர் முஹமட் அக்மல் சாலேவை, துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தொடர்பான வழக்கையும், பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் தொடர்பான வழக்கையும் ஒப்பிட்டு அவர் வெளியிட்ட கருத்துக்காக இன்று கடுமையாகச் சாடினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் அரசியல் கவனத்தை ஈர்ப்பதற்காகக் கிண்டல் கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு, சட்ட உண்மைகளை ஆராய்ந்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இரு வேறுபட்ட நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஒன்றாக ஒப்பிடுவது மக்களைக் குழப்புவதுடன், சட்டத்தின் அடிப்படை வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளத் தவறியதையும் வெளிப்படுத்துகிறது என்றும் பிரகாஸ் கூறினார்.

