தீபாவளியை முன்னிட்டு இந்திய சிறுதொழில் முனைவோருக்கு ‘பெர்காட் தெக்குன்’ நிதியுதவி

கோத்தா கெமுனிங், அக். 17-
தீபாவளியை முன்னிட்டு இந்திய சிறுதொழில் முனைவோரின் வணிக வளர்ச்சிக்கு உதவும் நோக்கில், ‘பெர்காட் தெக்குன்’ திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கும் நிகழ்வு கோத்தா கெமுனிங்கில் நடைபெற்றது.

அமைச்சர் ஸ்டீவன் சிம் மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில், அத்தொகுதியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோர் ஒருவருக்கு வணிக நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்திய சிறுதொழில் முனைவோர் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், குறிப்பாகத் தீபாவளி விற்பனைக்கான வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இத்திட்டம் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய சமூகத்தின் சிறுதொழில் முனைவோருக்கு நிதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோருக்கு ஏற்பாட்டுத் தரப்பினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும், தகுதியுள்ள இந்திய சிறுதொழில் முனைவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வணிகத்தை மேம்படுத்திக்கொள்ள முன்வருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles