
Bernama
ஷா ஆலாம், அக் 17 – கல்வாத் சம்பவத்தில் தாம் கைது செய்யப்பட்டதை பெர்சாமா கட்சியின் இணை தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஒப்புக் கொண்டதை அடுத்து, அக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து அவர் 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது இடைநீக்கம், அக்டோபர் 20 தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 19 -ஆம் தேதி வரை அமலில் இருக்குமென அக்கட்சி இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கட்சியின் நற்தோற்றத்தைப் பாதுகாப்பதோடு, மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக கட்சி செயல்படுவதை உறுதிச் செய்யவும், கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் கட்சி கடுமையாக எடுத்துக் கொள்ளும் என பெர்சாமா குறிப்பிட்டது.
நிக் நஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டாலும், கட்சியில் அவரது பங்களிப்பையும் கடப்பாட்டினையும் பெர்சாமா ஒருபோதும் புறந்தள்ளாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
செத்தியாவங்சா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நிக் நஸ்மி, முன்னதாக கட்சி எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் கட்டுப்படுவதாகக் கூறியிருந்தார்.

