விபத்தில் காயம் அடைந்த கலைச்செல்வத்திற்கு நிதியுதவி

பெந்தோங், அக் 17-
விபத்தில் காயம் அடைந்த
சகோதரர் கலைச்செல்வத்தை நலம் விசாரிக்கச் சென்றோம்

நான், சகோதரி வோங் சியூ மூன் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து, விபத்தில் காயமடைந்த சகோதரர் கலைச்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்.

அவர் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு தற்போது குணமடைந்து வருகிறார்.

இந்தச் சந்திப்பின்போது, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், எங்களால் இயன்ற சிறிய நிதியுதவியையும் வழங்கினோம்.

சகோதரர் கலைச்செல்வம் விரைவில் முழுமையாகக் குணமடைந்து, தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும், அவரது அனைத்து காரியங்களும் தடையின்றி நடைபெற வேண்டும் என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

பெந்தோங் நகராட்சி மன்ற உறுப்பினராகவும், பெந்தோங் தொகுதி மஇகா தலைவராகவும், மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன்.

நமது அக்கறையும் ஒற்றுமையும், துயரங்களை எதிர்கொள்ளும் வலிமையாக அமையட்டும்.

டாக்டர் ஜெயேந்திரன் ஜெயராமன்
பெந்தோங் நகராட்சி மன்ற உறுப்பினர்
பெந்தோங் – தொகுதி மஇகா தலைவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles