நேபாளம் வெள்ள பேரிடர்! பாதிக்கப்பட்ட பினாங்கு மாநில மக்களுக்கு நிதியுதவி

பிறை, அக் 17-
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்ட பினாங்கைச் சேர்ந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி எளிமையான முறையில் நடைபெற்றது.

பினாங்கு இந்து அறநிலைக் கழகத்தின் (LWHPP) முன்னெடுப்பின் மூலம், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா RM5,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்க இந்த உதவி துணையாக இருக்கும் என நம்புகிறேன் என்று பினாங்கு இந்து அறநிலையத் துறை துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
.
இந்நிகழ்வில் துணை அமைச்சர் YB Lim Hui Ying மற்றும் பினாங்கு இந்து அறநிலையத் துறை தலைவர் YB RSN Rayer (ஜெலுத்தோங்), YB Kumaresan Aramugam, திரு Visvenathan Tangavello மற்றும் ஏனைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த உதவி வெறும் நிதியுதவி மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மறக்கப்படவில்லை, இந்தத் துயரத்தை அவர்கள் தனியாக எதிர்கொள்ளவில்லை என்பதை உணர்த்தும் அக்கறையின் அடையாளமாகும்.
அன்புக்குரியவர்களின் நிலை குறித்த உறுதியான தகவல்களுக்காக இன்னும் காத்திருக்கும் குடும்பங்களுக்கு உரிய ஆதரவையும் உதவியையும் வழங்க மேலும் பலர் முன்வர வேண்டும் என நம்புகிறேன்.

இத்தகைய கடினமான தருணங்களில், மனிதநேயம், அக்கறை மற்றும் ஒற்றுமை ஆகியவை துயரங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு மிகுந்த மனவலிமையை அளிக்கின்றன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரங்கள் விரைவில் நீங்கி, அவர்களின் அனைத்துக் காரியங்களும் தடையின்றி நடைபெறவும், இந்தச் சோதனையான காலத்தைக் கடந்து செல்லத் தேவையான மனவலிமையும் தைரியமும் கிடைக்கவும் மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

ஒன்றிணைந்து உதவுவோம்; அன்பால் அவர்களின் துயரத்தைத் துடைப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles