ஈப்போ மெங்களும்பு தமிழ்ப் பள்ளிக்கு மலேசிய புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கம் 10,000 வெள்ளி நிதியுதவி!

ஈப்போ, அக் 18-
மலேசியத் திருநாட்டில் பல்லின மக்களுக்கு இனம் நிறம் பாராமல் Blues Brother Welfare Association Malaysia இயக்கம் பேருதவி புரிந்து வருகிறது.

தமிழ்ப் பள்ளி, சமூக நல இயக்கங்கள், ஆதரவற்ற இல்லங்களுக்கு தன்னால் இயன்ற அளவு புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கம் உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஈப்போ மெங்களும்பு தமிழ்ப் பள்ளியின் மேம்பாட்டு உதவும் வகையில் 10,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளது.

கடந்த வாரம் பள்ளிக்கு நேரடி வருகை தந்த Blues Brother Welfare Association Malaysia President Abdul Samad,
founder Dato Micheal, Advisor Mike உட்பட இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 10,000 வெள்ளிக்கான காசோலையை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கத்தின் வளர்ச்சிக்கு
ஆலோசகர் G. Chandrasekhar, இளைஞர் அணி தலைவர் Datuk Shankar, உச்ச மன்ற உறுப்பினர்கள் aனAppu, Ravi, Divian, Rahman, Salim, lingges guna ஆகியோர் பக்கம் பலமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்த புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கத்திற்கு பள்ளி நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles