மக்கள் ஓசை இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் காலமானார்!

செலாயாங், அக் 25-

மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியர் பி.ஆர். இராஜன் இன்று அதிகாலை காலமானார்.

அண்மைக்காலமாக உடல்நலப் பாதிப்பால் அவதியுற்று வந்த அவர், செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

அன்னாரின் மறைவு பத்திரிகைத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினருக்கு தினத்தந்தி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles