
கோலாலம்பூர், அக் 30
இந்து சமயத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளி 2026 பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் குழு அடிப்படையிலான பதிவில்லா விடுப்பு (Cuti Tanpa Rekod – CTR Kelompok) தொடர்பாக உரிய தளர்வுகளை வழங்குமாறு மாண்புமிகு பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் கவனத்திற்கு இவ்விவகாரத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்.
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது. அதேவேளை, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நவம்பர் 9, 2026 (திங்கட்கிழமை) மாற்றுப் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், இந்து சமயத்தைச் சேர்ந்த அரசுப் பணியாளர்கள் CTR Kelompok விடுப்பு வசதியை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, பண்டிகைத் தேதியும் வழக்கமான விடுமுறை நாட்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து வருவதால் பாதிக்கப்படும் இந்து சமய அரசுப் பணியாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு CTR Kelompok விடுப்பில் சிறப்புத் தளர்வு வழங்குவது குறித்து ஆராயுமாறு மாண்புமிகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் பொதுச் சேவைத் திணைக்களத்திற்கு (JPA) உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கோரிக்கைக்கு சாதகமான பரிசீலனை கிடைக்கும் என நம்புகிறேன்.
இந்து சமய அரசுப் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்து, பண்டிகையை மகிழ்ச்சியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுவதற்கு இது வழிவகுக்கும்.
நன்றி.
மாண்புமிகு செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம்

