
ஷா ஆலம், அக் 29-
வரும் நவம்பர் 8 ஆம் தேதி இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த தருணத்தில் சிலாங்கூர் மாநில அரசு தீபாவளி பற்றுச்சீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக RM5.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலா RM200 மதிப்பிலான சுமார் 24,000 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இது சற்று அதிகமாகவே உள்ளது.
இந்த தலா 200 வெள்ளி பற்றுச்சீட்டு 24,000 குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த 200 வெள்ளி மூலம் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை அவர்கள் வாங்கி கொள்ளலாம்.
இனி வரும் காலங்களில் இந்த பற்றுச்சீட்டு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

