டாக்டர் சுரேந்திரன் தலைமையில் சிலாங்கூர் காஜாங் சமூக நல இயக்கத்தின் சார்பில் தீபாவளி அன்பளிப்புகள்

காஜாங், அக் 29-
சிலாங்கூர் காஜாங் ஒருங்கிணைந்த சமூக நலச் சங்கம் ஏற்பாட்டில் தீபாவளி நன்கொடை வழங்கும் விழா : இளைஞர்கள் சமூகப் பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.

காஜாங்கில், சிலாங்கூர் காஜாங் ஒருங்கிணைந்த சமூக நலச் சங்கம் ஏற்பாட்டில் காஜாங் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி நிதியுதவி நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த வாரம் காஜாங் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் மாநில PPP தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சமூக நலப் பணிகளில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற சமூக சேவை முயற்சிகளில் இளைஞர்கள் முன்வந்து செயல்படுவதுடன்,

அடுத்த ஆண்டில் அவர்களின் பங்கேற்பு மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தேவைப்படுவோருக்கு உதவுவதில் சிறிய நற்செயல்கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாகத் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் எந்தக் குடும்பமும் மகிழ்ச்சியுடனும் கண்ணியத்துடனும் கொண்டாடும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்றார்.

சிலாங்கூர் காஜாங் ஒருங்கிணைந்த சமூக நலச் சங்கம் ஏற்பாட்டில் காஜாங் இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், PKBK தலைவர் தங்கவேலு அய்யாரூ, கூட்டமைப்பின் தலைவர் எம். குமரவேலு, மற்றும் மேலவை உறுப்பினர் தியாகராஜா ராஜகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles