Waze-க்கு மாற்றாக TuJu-வை அமல்படுத்தும் விவகாரம்; திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்: கணபதிராவ் கோரிக்கை

கிள்ளான்: அக் 29-

TuJu தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, Waze-க்கு மாற்றாக மலேசியாவில் தயாரிக்கப்பட்ட புதிய சாலை வழி செலுத்தல் செயலியை உருவாக்க மத்திய அரசு ஒரு திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் தொழில்நுட்பத் திட்டங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயமான போட்டியை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் ஒரு திறந்த டெண்டரை செயல்படுத்த வேண்டும்.

அவ்வகையில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் அழைப்பை ஆதரிப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் கூறினார்.

TuJu திட்டத்தின் செலவு, கொள்முதல் செயல்முறை, உரிமை, உருவாக்குநர்களின் தேர்வு மற்றும் ஒப்பந்த ஒப்புதலுக்கான அடிப்படை ஆகியவற்றை அரசாங்கம் விளக்க வேண்டும்.

இதில், புரோசிக்னல் கன்சார்டியம் எஸ்.டி.என். பி.எச்.டி இந்தத் திட்டத்தை எவ்வாறு கையகப்படுத்தியது. திறந்த டெண்டர் செயல்படுத்தப்பட்டதா என்பதும் அடங்கும்.

திறந்த டெண்டர் இல்லை என்றால், அரசாங்கம் அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் மற்றும் முறையான வணிக மற்றும் சட்டரீதியான பரிசீலனைகளுக்கு உட்பட்டு, ஒப்புதல் செயல்முறை, ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles