சிலாங்கூர் i-SEED உதவித் திட்டம் 8 மாவட்டங்களில் நிறைவு! : பாப்பாராய்டு

ஷா ஆலாம், அக். 29,-

இவ்வாண்டின் சிலாங்கூர் மாநில இந்தியத் தொழில்முனைவோருக்கான உபகரண உதவித் திட்டத்தின் (ஐ-சிட்) கீழ் உதவிகளை வழங்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதுவரை மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதியாக கோம்பாக் மாவட்டத்தில் எதிர்வரும் அக்டோபர் 29ஆம் தேதி உதவிகள் வழங்கப்படவுள்ளன.

சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு
சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் 2026 தொடர்பாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு தொழில்முனைவோரின் வணிகத் திறன், உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என விளக்கினார்.

தொழில்முனைவோரின் தேவைகளுக்கு ஏற்ற வணிக உபகரணங்களை வழங்குவதன் மூலம், அவர்களின் தொழிலை மேம்படுத்தவும், வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இத்திட்டம் உதவும் என்றார் அவர்.

மேலும், எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்திலும் ஐ-சிட் திட்டம் இடம்பெறவுள்ளது. அன்றைய நிகழ்ச்சியின்போது உதவி பெறும் தொழில்முனைவோருக்குக் காசோலை மாதிரிகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதாகப் பாப்பராய்டு தெரிவித்தார்.

இந்தியச் சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் சிலாங்கூர் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles