தீபாவளியை முன்னிட்டு 101 பேருக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி – தொடர்ந்து 5ஆவது ஆண்டாக டத்தோஸ்ரீ கிஷோர் குமார் ஆதரவு

கோலாலங்காட், அக். 29-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோலாலங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 101 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கோலாலங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகமும், சிலாங்கூர் சமூக மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தீபாவளி பண்டிகையை ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவி வழங்கப்பட்டது என்று கோலலங்காட் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் தெரிவித்தார்.

இதில் பி40 பிரிவைச் சேர்ந்த 101 பேர் புத்தாடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு டத்தோஸ்ரீ கிஷோர் குமார் தொடர்ந்து ஆதரவும் நிதியுதவியும் வழங்கி வருகிறார் என்று அவர் கூறினார்.

அவரது பங்களிப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதுகுறித்து ஏற்பாட்டாளர் ஹரிதாஸ் கூறுகையில், “தீபாவளி பண்டிகையின்போது வசதி குறைந்த குடும்பங்களுக்கும் புத்தாடைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

புத்தாடைகளைப் பெற்றுக்கொள்பவர்களின் முகங்களில் காணப்படும் மகிழ்ச்சியே எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது.

இந்த முயற்சிக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவாக இருந்து வரும் டத்தோஸ்ரீ கிஷோர் குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வரும் ஆண்டுகளிலும் இந்த உதவியைத் தொடர்ந்து வழங்க விரும்புகிறோம்” என்றார்.

நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles