புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார் யுவனேஸ்வரன்

ஜொகூர், அக்.30-

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை பெற்று வரும் திருமதி மாரியம்மாள் சுப்பிரமணியம் என்பவருக்கு மருத்துவமனை கட்டில் மற்றும் சக்கர நாற்காலி ஆகியவற்றை வழங்கி ஆறுதல் கூறினார் செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுவனேஸ்வரன்.

மக்களவை மற்றும் அமைச்சுப் பணிகள் என பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியில், ஜெமந்தா, தாமான் ஜெயாவில் உள்ள மாரியம்மாளின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாரியம்மாள் தற்போது கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையையும், குடும்பத்தினர் எதிர்கொண்டு வரும் சிரமங்களையும் அறிந்த அவர், மாரியம்மாளின் அன்றாட பராமரிப்புக்கும் சிகிச்சைக் காலத்தில் வசதியாக இருப்பதற்கும் மருத்துவமனை கட்டில் மற்றும் சக்கர நாற்காலியை வழங்கினார்.

தாம் வழங்கிய உதவி அவரது வலியையும் சிரமத்தையும் முழுமையாகப் போக்கிவிடாது என்றாலும், குடும்பத்தினரின் சுமையைக் குறைத்து அன்றாட பராமரிப்புக்கு ஓரளவு உதவியாக இருக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாரியம்மாள் மனவலிமையுடன் இருந்து, இந்த நோயின் சவாலைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஆறுதல் கூறினார்.

நோயிலிருந்து மீண்டு, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட இறைவன் அருள்புரிய வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் மட்டும் உடனிருப்பவராக இல்லாமல், அவர்கள் துயரங்களை எதிர்கொள்ளும்போது தனித்துவிடப்படவில்லை என்ற நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles